டோக்கியோ:  ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டின் பிரதமராக  பதவி வகித்து வந்த ஷின்ஜோ அபே,  வயது முதிர்வு மற்றும்  உடல் நலனை கருத்தில் கொண்டு  சமீபத்தில்  தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா  தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நாட்டின் 99வது பிரதமர் ஆவார்.

ஜப்பான் நாட்டில்,  ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பில் உள்ளவரே, நாட்டின் பிரதமராகவும் இருந்து வருவது வழககம். அதன்படி,  ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவராக இதுவரை இருந்து வந்த, ஷின்ஜோ அபே, பிரதமராகவும் பதவி வகித்து வந்தார். நீண்ட காலமாக அவர் பிரிதமர் பதவியில் இருந்து மக்கள் சேவையாற்றிய நிலையில், உடல்நலப் பாதிப்பு காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அதைதொடர்ந்து, புதிய பிரதமர்  தேர்வு செய்வதற்கான  போட்டியில், முன்னாள் வெளியுறவு மந்திரி பமியோ கிஷிடா, முன்னாள் ராணுவ மந்திரி ஷிகெரு இஷிபா மற்றும் ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளரும், ஷின்ஜோ அபேயின் விசுவாசியுமான யோஷிஹைட் சுகா ஆகியோர் போட்டியினர்.

இதற்கான வாக்கெடுப்பு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. ஜப்பான் பாராளுமனற்த்தில், மொத்தமுள்ள  535 உறுப்பினர்களும், 47 மாகாணங்களை சேர்ந்த ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளும் கட்சியின் புதிய தலைவராக யோஷிஹைட் சுகாவை தேர்வு செய்தனர்.

இந்த நிலையில், இன்று  (எல்.டி.பி-கன்சர்வேடிவ்) பிரதிநிதிகள் சபையால் அதிகாரப்பூர்வமாக யோஷிஹைட் சுகா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்டமன்றத்தின் கீழ் சபையில் பதிவான 462 வாக்குகளில் 314 வாக்குகளைப் பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதையடுத்து,  நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்றத்தால் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.

ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் ஆட்சி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடையும் நிலையில், இன்று தேர்வு செய்யப்படும் தலைவர் ஓர் ஆண்டுக்கு கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துவார்.