சேலம்

பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சமூக வலைதள  பக்கத்தில் தனது மனைவி மற்றும் மகளுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.  இவர் ஏற்கனவே ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் விளையாடி உலகப் புகழ் பெற்றுள்ளார்.  சேலம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்துள்ள நடராஜன் உலகப்புகழ் பெற்றதில் தமிழக மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இவருக்குச் சமீபத்தில் மகள் பிறந்துள்ளார்.

தற்போது இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் நடராஜன் பங்கேற்கிறார்.  அடுத்த வாரம் அகமதாபாத் சென்று அணியில் நடராஜன் இணைகிறார்.   நடராஜன் தனது மனைவி மற்றும் மகளுடன் உள்ள புகைப்படம் ஒன்றை சமூகவ வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார்.  மகளுக்கு ஹன்விகா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நடராஜன் தனது பதிவில், “எங்களின் குட்டி தேவதை ஹன்விகா,  நீ எங்கள் வாழ்க்கையில் கிடைத்த அழகான பரிசு.  எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய நீயே காரணம்.  உன் பெற்றோராக எங்களைத் தேர்வு செய்தமைக்கு நன்றி.  எப்போதும் நாங்கள் உன்னை நேசித்துக் கொண்டு இருப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தைப் பரவலாகப் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.