என்னையும் முதல்வரையும் பிரிக்க முயற்சிக்கிறீர்கள்! ஊடகத்தினர் மீது பாய்ந்த ஓபிஎஸ்

திருச்சி

ன்று விமானம் மூலம் திருச்சி வந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எனக்கும் முதல்வருக்கும் நல்ல உறவு இருக்கிறது. நீங்கள்தான் பிரிக்க முயற்சிக்கிறீர்கள். அது நடக்காது என்று கூறினார்.

துணைமுதல்வர்  ஓபிஎஸ் இன்று மதியம் விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்றார். திருச்சி விமான நிலையித்தில் செய்தியார்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர் களின் கேள்விக்கு பதில் அளித்தவர்,   நிர்வாக ரீதியாக கருப்பு பணத்தை பதுக்குவதற்காகத்தான் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் வெளிநாடு சென்றதாக கூறப்படுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று எதிர்க்கட்சிகளை சாடினார்.

மேலும், அமித்ஷாவின் இந்தி மொழி குறித்த கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர்,  தமிழ்நாட்டில் அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும். இதில் தமிழகம் எந்த விதத்திலும் பின்வாங்காது என்றார்.

மேலும்,  5, மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு முன்பு பொதுத் தேர்வு நடைபெற்றது.. அது இடையில் கைவிடப்பட்டது. தற்போது, மாணவர்களின் படிப்புத்திறனை அதிகரிக்கத்தான் இந்த பொதுத் தேர்வு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் முதல்வர் தொடர்பான கேள்விக்கு, எனக்கும் முதல்வருக்கும் நல்ல உறவு இருக்கிறது. நீங்கள்தான் பிரிக்க முயற்சிக்கிறீர்கள். அது நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.