புதுடில்லி: யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஒரு புதிய கொள்கையை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் எந்தவொரு நபரும், அமைப்பும் அல்லது எம்எல்ஏ அல்லது எம்.பி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியும் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியைத் “தத்தெடுக்க” முடியும்.

குழந்தைகளுக்கு  “சுத்தமான, முழுநிறைவான மற்றும் மேம்பாடான சூழல்”. வழங்க வேண்டுமென்ற உ.பி. அரசின் ஆலோசனையின் படி இதுபோன்ற திட்டம் குறித்த ஆணை இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய கொள்கை உ.பி.யில் உள்ள பள்ளிகளின் மோசமான வசதிகள் அல்லது தரம் குறைந்த மதிய   உணவு தொடர்பாக தொடர்ச்சியான ஊடக அறிக்கைகளின் பின்னணியில் வந்துள்ளது.

எந்தவொரு காய்கறிகளோ அல்லது பருப்பு வகைகளோ இல்லாமல் பள்ளி குழந்தைகளுக்கு ரொட்டி மட்டும் வழங்கப்பட்டதும், குழந்தைகளுக்கு பால் வழங்கப்படுவதில் பெரிய அளவிலான தண்ணீரில் நீர்த்தப்பட்டும் ஒரு இறந்த எலி கூட ஒரு மதிய உணவில் காணப்பட்டதெனவும் எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த திட்டம் வந்துள்ளது.

தத்தெடுப்புக்கான புதிய கொள்கையில்,  பள்ளிகளை தத்தெடுக்கும் செயல்முறையை செயல்படுத்தும் போது “கல்வி உரிமை சட்டத்தை மீறக்கூடாது” என்று குறிப்பிட்டுள்ளது. புதிய கொள்கையின்படி, பள்ளியின் பெயர் மாற்றப்படாது, ஆனால் பள்ளியைத் தத்தெடுக்கும் நபருக்கு பள்ளியில் கையொப்பமிடுவதன் மூலம் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படும்.

பள்ளியை ஏற்றுக்கொள்ளும் நபர் அல்லது அமைப்பு பள்ளி கட்டிடம் மற்றும் மின் வயரிங் ஆகியவற்றை மேம்படுத்துதல், மின்விசிறிகள், விளக்குகள், மேசைகள், நாற்காலிகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை வழங்க முடியும்.

தத்தெடுப்பவர் பள்ளியில் ஒரு நூலகம் மற்றும் சுத்தமான குடிநீர் வசதிகளை அமைக்கவும் உதவலாம். “எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்போ பள்ளியில் இலவச ஆய்வுப் பொருட்களின் வசதிகளை வழங்க விரும்பினால், அது தற்போதைய பாடத்திட்டத்தை பாதிக்கவில்லை அல்லது எந்தவொரு மத அல்லது அரசியல் உரையாடலையும் ஈடுபடுத்தவில்லை என்றால் அதைக் கருத்தில் கொள்ளலாம்” என்று உ.பி. அரசாங்கத்தின் உத்தரவு கூறுகிறது.