விரைவில் அஞ்சலகங்களில் பாஸ்போர்ட்டு பெறும் வசதி: மத்திய அமைச்சர் தகவல்

நாகர்கோவில்:

பாஸ்போர்ட்டு பெறும் வகையில் நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் அதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்து உள்ளார்.

தற்போது வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் பாஸ்போர்ட்டு எடுக்க கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் பாஸ்போர்ட்டு எடுக்க வசதியாக மொபைல் ஆப் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில், தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட்டு வழங்க வசதி செய்யப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

கன்னியாகுமாரி மாவட்டம் குழித்துறையில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில்  2 கோடி  ரூபாய் மதிப்பில்  துணை அஞ்சல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த  புதிய கட்டிடத்தை மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,

பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும்  300 தபால் நிலையங்கள் பாஸ்போர்ட் வழங்க கூடிய வகையிலும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் 50 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் பாஸ்போர்ட்டு வழங்க ஏதுவாக தபால்  நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு  பாஸ்போர்ட்டு விண்ணப்ப படிவம் வழங்க 214 தபால் நிலையங்கள் செயல்பட இருப்பதாகவும், ஒவ்வொரு தபால் நிலையத்திலும் தலா 5 நபர்கள் அதற்காக பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்து உள்ளார்.