மாநிலங்களவையில் இனி எந்தமொழியிலும் பேசலாம்….: வெங்கையாநாயுடு அசத்தல்

டில்லி:

நாட்டின் பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவையில் நாட்டின் பேசப்பட்டு வரும் அங்கீகரிக்கப்பட்ட  22 மொழிகளில் எந்தமொழியிலும் இனிமேல் பேசலாம் என்று துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையாநாயுடு அறிவித்து உள்ளார்.

வரும் 18ந்தேதி தொடங்க இருக்கும்   மழைக்கால கூட்டத் தொடரில் இருந்து  மாநிலங்களவை யில் 22 மொழிகளிலும் உறுப்பினர்கள் பேசலாம் என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மாநிலங்களில் 17 மொழிகளில் உறுப்பினர்கள் பேசும் வகையில் மொழி பெயர்ப் பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீதமுள்ள 5 மொழிகளான டோக்ரி, காஷ்மீரி, கொங்கனி, சந்தாலி, சிந்தி  ஆகிய மொழிகளுக்கு தேவையான மொழி பெயர்ப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வெங்கையாநாயுடு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் உறுப்பினர்கள் பேசுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.

ஏற்கனவே தாய்மொழியில் பேசுவதை ஊக்குவித்து வரும் வெங்கைநாயுடு, நமது நாட்டில், பல மொழி பேசும்   உறுப்பினர்களுடன் செயல்படும் நாடாளுமன்றத்தில், மொழிப் பிரச்னையால் எந்த உறுப்பினரும் சிரமத்துக்கு ஆளாக கூடாது என்பதாலேயே அனைத்து மொழிகளிலும் பேசும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும்,  நமது கருத்துகளை எந்த தயக்கமும் இன்றி தாய்மொழியில் தான் கூற இயலும் என்பதில் எப்போதுமே எனக்கு நம்பிக்கை உண்டு என்றும் தெரிவித்து உள்ளார்.