சென்னை: தமிழகத்தில் கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதிப்பருவத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பல்கலைக்கழகம் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, மாணாக்கர்கள் வீட்டில் இருந்தபடியே  ஆன்லைனில் தேர்வு எழுதலாம் என்றும், 90 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும், ஏ4 (A4) தாளில் தான் விடைகளை எழுதி பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  இறுதி செமஸ்டர் தேர்வு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் எழுத சென்னை பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆன்லைன் வசதி இல்லாத மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை வீட்டில் இருந்தபடியே எழுதி , இறுதி விடைத்தாள்களை ஸ்பீட் போஸ்ட் மூலம் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கலாம்.

 விடை எழுதும் ஏ4 தாள்களின் ஒவ்வொரு பக்கத்திலும் மாணவர்களின் பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும்.

ஒரு நபர்  18 தாள்களுக்கு மிகாமல் தேர்வு எழுதி அனுப்பலாம்

காலை,மாலை என்று இருவேளைகளிலும் தேர்வு நடத்தப்படும். காலை 10 மணி முதல் 11 மணி வரை, பகல் 2 மணி முதல் 3 மணி வரையும் என ஒவ்வொரு தேர்வும் 90 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது.

 விடைத்தாளை பதிவேற்றம் (Upload)  செய்வதில் பிரச்சனை ஏற்பட்டால் ஸ்பீடு போஸ்டு ( Speed Post)  அனுப்பலாம்.

வினாத்தாள் தரவிறக்க இணைப்பு அந்தந்த மாணவர்களின் செல்போன் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இணைய வசதி இல்லாத மாணவர்கள் வீட்டில் இருந்தபடி இறுதி செமஸ்டர் தேர்வு எழுத சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.