அநியாயமா கொன்னுட்டீங்களே! :காடுவெட்டி குரு தாயாரின் அதிர்ச்சி வீடியோ

காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், தனது  தாயாரை தனது  உறவினர்கள் சிலரே கடத்தி வைத்திருப்பதா வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் காடுவெட்டி குருவின் தாயார், வன்னியர் சங்க செயலாளர்களில் ஒருவரான வைத்தி என்பவரிடம் ஆதங்கத்துடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ-வும் வன்னியர் சங்கத்தலைவருமான காடுவெட்டி குரு, நுரையீரல் காற்றுப்பை திசு பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதையடுத்து  சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான்கு மாத காலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்தநிலையில், குருவின் மனைவி லதா, “சொத்துக்காக என் பிள்ளைகளை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறார்கள். அவர்களோடு சேர்த்து வையுங்கள்” என்று  எழுதியதாகக் கடிதம் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து குருவின் மகன் கனலரசன்  தன் தாயை அவர்களின் உறவினர்களிடமிருந்து மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில் குருவின் தாயார் கல்யாணியம்மாள் பா.ம.க மாநிலத் துணைப் பொதுச் செயாலாளர் வைத்தியை கடுமையாக  வசைபாடும் வீடியோ ஒன்று வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வீடியோவில், “கட்சி கட்சின்னு சொல்லி என் மகன் குருவை அழிச்சிட்டீங்கள். இப்போது எதுக்குடா என் பேரனை இழுத்துக்கிட்டு போனீங்க. என்னோட பிள்ளையாலதான் நீங்கள் எல்லாம்  கட்சிக்குள்ளே வந்தீங்க. இப்போ நீங்கள் எல்லோரும் மூணு வீடு, நாலு வீடுனு கட்டி சந்தோஷமா காசு பணத்தோடு வாழறீங்க. ஆனா, நாங்க மட்டும் கடன்ல  தத்தளிக்கிறோம். எங்க குடும்பத்துக்கு உதவி செய்யுறவுங்கள ஏண்டா தடுக்குறீங்க. உங்களுக்கு நாங்க என்னடா பாவம் செய்தோம். நீ துரோகம் பண்ணிட்ட. உருப்படவே மாட்டாய். என் பிள்ளையோட பேரை பயன்படுத்தி கோடி கோடியா கொள்ளையடிச்சவன்டா நீ. என்னோட மகன் செத்து ஒரு வருசம் ஆகுறதுக்குள்ள உங்களை எல்லாம் பலி தீர்ப்பாண்டா. என் குடும்பத்தை அழித்த நீங்கள் நல்லா இருக்க மாட்டீங்கடா” என்று தலையில் அடித்துக்கொண்டு சாபமிடுவது போல் சொல்கிறார் குருவின் தாயார் கல்யாணியம்மாள்.

அந்த வீடியோ..