கஜா புயல் பாதிப்பு:  அவசியம் பின்பற்றப்பட வேண்டிய ஆலோசனைகள்

ஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கிறது.

மழை, வெள்ளத்தின்போதும் வெள்ளத்திற்கு பிறகு பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய சுகாதார ஆலோசனைகள் குறித்து பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில் குறிப்பிட்டுள் ஆலோசனைகள்:

“புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க பாதுகாக்கப்பட்ட குடிநீரை கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும்.

தொற்றுநோய் வராமல் தடுக்க, சோப்பு பயன்படுத்தி கைகளை அடிக்கடி நீரில் கழுவ வேண்டும்.

மழையில் நனைந்த பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை தொடர்பு கொள்ள வேண்டும்.

சரியான அளவில் குளோரின் கலந்த குடிநீரை பயன்படுத்த வேண்டு

குடிநீர் தொட்டிகள் மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தபின் குடிநீரை சேகரிக்க வேண்டும்.

பொதுமக்கள் கழிவறை வசதிகளை பயன்படுத்த வேண்டும்

குப்பை மற்றும் அழுகிய பொருட்கள் தேங்காமல் உடனடியாக அகற்ற வேண்டும்.

குப்பை கொட்டும் இடங்களில் பிளிச்சீங் பவுடர் மற்றும் சுண்ணாம்பை கொண்டு கிருமிகளை நீக்க வேண்டும்

வீடுகளில் மழைநீர் தேங்கினால் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளதால், அவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொள்வது அவசியம்

வீட்டைச் சுற்றிக் கிடக்கும் தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும்

இறந்துபோன விலங்குகள், பறவைகளை காண நேர்ந்தால் உடனடியாக மாநகராட்சி/ நகராட்சி/ பேரூராட்சி/ ஊராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்”  என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு சுகாதாரத்துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையத்தை 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#healthdepartment’ # advice #tamilnadu #prevent #spread #infection #storm #affected #districts #Gaja