பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 294 ரன்களுக்கு ஆல்அவுட் ஆக்கியது இந்தியா.

இதன்மூலம், இந்த டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்வதற்கு, முதல் இன்னிங்ஸ் முன்னிலையையும் சேர்த்து 328 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மட்டுமே அரைசதம் அடித்தார். கடைசி நேரத்தில் பெளலர் டிம் பெய்னே கட்டையைக் கொடுத்து 28 ரன்களை சேர்த்தார். இதனால், கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிர்பாராத வகையில் கூடுதல் ரன்கள் கிடைத்தன. ஆஸ்திரேலியா 75.5 ஓவர்கள் தாக்குப்பிடித்தது.

இந்தியா சார்பில், முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஷர்துல் தாகுர் 4 விக்கெட்டுகளை எடுக்க, சுந்தருக்கு கிடைத்தது 1 விக்கெட். நடராஜன் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

தற்போது, 1 நாளுக்கும் மேலாக ஆட்டம் மீதமிருப்பதால், இந்திய அணி வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.