மூன்று வயது சிறுமியின் வாய்க்குள் பட்டாசு வைத்து வெடித்த சிறுவன்: ஐம்பது தையல்களுடன் சிறுமி கவலைக்கிடம்

த்தரப் பிரதேசத்தில் மூன்று வயது சிறுமியின் வாய்க்குள் பட்டாசை வைத்து வெடித்த சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி. மாநிலத்தின் மீரட்ட மாவட்டத்தில் உள்ளது மிலாக் என்ற கிராமம்.  இங்கு வசிக்கும் சசி குமார் என்பவருக்கு மூன்று வயதில் மகள் ஒருவர் உள்ளார். அந்தக் குழந்தை தீபாவளிக்கு முந்தைய தினம்  அவர் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹர்பால் என்ற சிறுவன், பட்டாசுகளை வெடித்தான். அப்போது அவன் திடீரென  சிறுமியின் வாய்க்குள் பச்சை நிறம் கொண்ட பாம் வெடியை திணித்து, பற்றவைத்துவிட்டான்.

பட்டாசு வெடித்ததில் சிறுமியின் வாய் உள்பட முகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சிறுமியை  அருகில் உள்ள மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். அங்கு அவருக்கு 50 இடங்களில் தையல் போடப்பட்டது.

இதற்கிடையே, சிறுவன் ஹர்பால் தலைமறைவாகிவிட்டான். அவனை அவனது பெற்றோர் எங்கோ மறைத்துவைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவன் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.