ஜெயலலிதா சமாதி முன்பு திருமணம் செய்த ஜோடி!

சென்னை,

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சமாதி முன்பு மாலை மாற்றி ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா  உடல்நலக்குறைவால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி  கடந்த 5–ந் தேதி  இரவு மரணமடைந்தார்.

அவரது உடல் அண்ணாசதுக்கத்தில் அமைந்துள்ள  எம்ஜிஆர் சமாதி வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது சமாதிக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினசரி அங்கு வந்து கண்ணீர்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவால்  அ.தி.மு.க. தொண்டர்கள்  மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் இருந்து அதிமுகவினரும், பொதுமக்களும் இரவு பகல் பாராது  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று திடீரென, சென்னை கொள்தூர் பகுதியை சேர்ந்த காதல் ஜோடி ஜெயலலிதா சமாதி முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பிரான்சிஸ்- ரெஜூலா ப்ரீத்தி ஜோடியினர், தங்களது ஒருசில உறவினருடன் வந்து,  ஜெயலலிதா சமாதி முன்பு தாங்கள் கொண்டு வந்திருந்த மாலைகளை ஒருவருக்கொருவர் மாற்றி  திருமணம் செய்து கொண்டனர்,  உடருந்த உறவினர்கள் அவர்களுக்கு மலர்தூவி உறவினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதைபார்த்து ஆச்சரியமடைந்த கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் அவர்களை வாழ்த்தி சென்றனர்.

இவர்களுக்கு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 1ந்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.