நடிகர் சுஷாந்த் மரணம்: 13 வயது ரசிகை, 55 வயது ரசிகர் தற்கொலை.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..

சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது அவரது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பி னர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, உறவுக்கார பெண் ஒருவர் சுஷாந்த் உடலை தகனம் செய்ததை அறிந்து சாப்பிடாமல் இருந்து மரணம் அடைந்தார்.
இந்நிலையில் ஒடிசாவின் கட்டாக்கில் 13 வயது சிறுமியும் 55 வயது ஆணும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படு கிறது.
கட்டாக்கின் ஜோப்ரா பகுதியில் வெள்ளிக் கிழமை (ஜூன் 19) 13 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படு கிறது. சரஸ்வதி ஷிஷு மந்திரின் மாணவராக இருந்த இவர் சமீபத்தில் ஒன்பதாம் வகுப் புக்கு தேர்ச்சி பெற்றார். சுஷாந்த் சிங் ராஜ் புத்தின் மரணம் குறித்து சிறுமி அறிந்ததி லிருந்து சிறுமி கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார். அவர் தனது குடும்ப உறுப்பினர்கள் இல்லாத நிலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாஅக் குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கட்டாக் டி.சி.பி அகிலேஸ்வர் சிங் கூறுகை யில், 13 வயது இளம் பெண் மால்கோ டவுனில் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் காரணமாக அவர் வருத்தப்பட்டதாகவும், மனச்சோர்வு காரணமாக அவர் தன்னைத்தானே கொலை செய்ததாகவும் குடும்ப உறுப்பினர்களின் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி விசாரணை வெவ்வேறு கோணங்களில் நடந்து வருகிறது. வேறு காரணமாக இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுப்போம்’என்றார்.
இதேபோன்ற ஒரு சம்பவத்தில், நடிகரின் 55 வயதான ரசிகர் ஒருவர் கட்டாக்கில் உள்ள தனது அலுவலகத்தின் ஒரு அறைக்குள் சுஷாந்த் போலவே மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உயிரிழந்தவர் ஜகத்சிங்பூரைச் சேர்ந்த நிரஞ்சன் ரூட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அப்பகுதியில் வேலை செய்து கொண்டி ருந்தார்.