டெல்லியில் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழுநோயாளி : உடன்படாததால் இரும்பு தடியால் அடித்து கொன்ற கோரம்

 

புதுடெல்லி :

டெல்லியின் நந்தனகிரி பகுதியில் உள்ள; ‘லெப்ரசி காலனி’ குடியிருப்பில் வகீல் போடர் என்ற தொழுநோயாளி மனைவியுடன் குடியிருந்து வருகிறார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த போடரின், 17 வயது உறவுப்பெண் இவரது வீட்டில் தங்கி இருந்து டெல்லியில் கல்வி பயின்று வந்தார்.

போடார் ரிக்‌ஷா தொழிலாளி ஆவார். தொழுநோயாளியான அவர் மனைவி டெல்லியில் பிச்சை எடுத்து வருகிறார்.

போடர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ,அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதற்கு மாணவி உடன்படவில்லை.

இந்த விஷயம் போடரின் மனைவிக்கு தெரிய வந்ததும் ஆத்திரம் அடைந்தார். சொந்த ஊருக்கு செல்லுமாறு, மாணவியை வலியுறுத்தியுள்ளார்.
“படிப்பு முடிந்த பின் போகிறேன்.அதுவரை இங்கு தான் இருப்பேன்” என்று பிடிவாதமாக கூறி இருக்கிறார்.

மாணவி வீட்டில் தங்கி இருந்தால் பிரச்சினை வரும் என நினைத்த போடரின் மனைவி, மாணவியை கொன்று விடுமாறு கணவனை கட்டாயப்படுத்தியுள்ளார்.

தனது விருப்பத்துக்கு இணங்காததால் ஏற்கனவே மாணவி மீது போடர் ஆத்திரத்தில் இருந்தார், மனைவி வேறு கொல்லுமாறு கூறி விட்டதால் சில தினங்களுக்கு முன்னர் மாணவி வீட்டில் தூங்கும் போது, தலையில் இரும்பு தடியால் அடித்து கொலை செய்தார்.

சடலத்தை போர்வையால் மூடி, வீட்டில் உள்ள படுக்கையில் சுருட்டி வைத்துள்ளனர்.
இது குறித்து பக்கத்து வீட்டார் அளித்த தகவலின் பேரில் போலீசார், ரிக்‌ஷா தொழிலாளி போடரையும், அவர் மனைவியையும் கைது செய்துள்ளனர்.

– பா.பாரதி