ஜெமினி மேம்பாலம் அருகே செல்போன் டவரில் ஏறி வாலிபர் மிரட்டல்!

சென்னை,

ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்யப்போவதாக வாலிபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

அவரை கீழே இறங்கும்படி போலீசார் கூறி வருகின்றனர். அவரை டவரில் இறக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சென்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர் பெயர் ரவிச்சந்திரன் என்றும், விலைவாசி உயர்வு மற்றும், ஊழல், பொதுமக்கள் தற்கொலையை கண்டித்து 5வது ஆண்டு டவர் போராட்டம் நடத்துவதாக அவர் நோட்டீஸ் விநியோகித்துள்ளார்.