பிரபல பாடகியின் மகன் இசை அமைப்பாளர் ஆதித்யா திடீர் மரணம்..

ந்தி படங்களில் பல்வேறு பாடல்கள் பாடி இருப்பவர் பின்னணி பாடகி அனுராதா பட்வல். தமிழிலும் பாடல் கள் பாடி இருக்கிறார். ‘பிரியம்’ படத்தில், தில் ரூபா தில் ரூபா, ‘கனவே கலையாதே’ படத்தில்’ பூசு மஞ்சள் பூசு மஞ்சள்’ பாடியதுடன் இந்தியில் 80 களில் கமல்ஹாசன் நடித்த கமல்ஹாசன் ஏக் துஜே கேலியே இந்தி படத்தில், மேரே ஜீவன் சாத்தி பாடலை எஸ்.பி.பி யுடன் இணைந்து பாடினார்.


அனுராதா பட்வல் மகன் ஆதித்யா பட்வல் (35) . இசை அமைப்பாளராக இருந்து வந்தார். மறைந்த பால் தாக்ரே யின் வாழ்க்கை படமான ‘தாக்கரே’ படத்துக்கு அவர் இசை அமைத்திருந் தார். சில மாதங்களுக்கு முன்பு, ஆதித்யா பட்வல் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பி னார். மீண்டும் சில நாட்களுக்கு முன் உடல் நிலை பாதிக்கப்பட்டது இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டிருந்தது அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. சிகிச்சை பலனில்லாமல் நேற்று மரணம் அடைந்தார்.
ஆதித்ய பட்வல் மரணத்துக்கு லதா மங்கேஷ்கர், சங்கர் மகாதேவன் உள்ளிட்ட பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.