அபுதாபி: எங்கள் அணியின் இளம் வீரர்கள்தான், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி தேடித் தந்தனர் என்று பாராட்டியுள்ளார் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்.
தனது முதல் இரண்டு போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் எடுத்து மிரட்டிய ராஜஸ்தானை, 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது கொல்கத்தா அணி.
இந்த வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளதாவது, “ஷப்மன் கில், மாவி, நாகர்கோட்டி மற்றும் வருண் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி கிடைத்தது. அதேநேரம் அவர்கள் மீது அதிகமான எதிர்பார்ப்பை வைத்து நெருக்கடி கொடுக்க நான் விரும்பவில்லை.
அவர்கள், தங்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதுமானது. ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், எங்கள் அணியின் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்” என்றுள்ளார் கார்த்திக்.