Random image

உத்தரபிரதேசத்தில் முத்தலாக் கொடுமைக்கு இளம்பெண் பலி…..கணவர் கைது

லக்னோ:

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நயீம் என்பவர் தனது மனைவி ரசியாவை கடந்த ஏப்ரலில் செல்போன் மூலம் முத்தலாக் கூறியுள்ளார். அதோடு ரசியாவை தனி அறையில் உணவு, குடிநீர் இன்றி அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார். ரசியாவை அவரது குடும்பத்தினர் மீட்டனர். எனினும் ரசியாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இது குறித்து ரசியாவின் சகோதரி கூறுகையில், ‘‘2005-ம் ஆண்டு திருமணம் ஆன சில நாட்களில் இருந்து வரதட்சணை கேட்டு நயீம் கொடுமை படுத்தினார். சமீபத்தில் தொலைப்பேசி மூலம் அவர் தலாக் கொடுத்தார்’’ என்றார். இத குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நயீமை கைது செய்தனர்