காந்திநகர்:

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

குஜராத்தின் 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக நடை பெற உள்ளது.  முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த வாக்குகள் டிசம்பர் 18-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

முதல் கட்டமாக இன்று நடைபெற்று வரும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 19 மாவட்டங்களின்  நடைபெற்று வரும் வாக்குப்பதிவுக்காக   மொத்தம் 24,689 வாக்குச் சாவடிகள்  அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முதல் கட்ட வாக்குப்பதி வின்போது   2,12,31,652 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ஆண்கள்- 1,11,05,933; பெண்கள்- 1,01,25,472; மூன்றாம் பாலினத்தவர்- 247.

இன்று காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்ற னர். பெண்கள் மற்றும் இளைஞர்கள் காலையில் இருந்தே நீண்ட வரிசை யில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களின் உற்சாக வாக்குப்பதிவு உள்ளது.

இந்த தேர்தலில் யாருக்கு வாக்க ளித்தோம் என்பதை அறியும் ஒப்புகை சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக 27,158 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் கூடிய ரசீது வழங்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வாக்குப்பதிவு தொடங்கியதையொட்டு வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.