திராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து கூறிய  மாணவர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் நெடுவாசலிலும் புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் குதி  மக்கள் போராடி வருகிறார்கள். இவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. மேலும் பல அமைப்புகளும், இளைஞர்கள், மாணவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இப்போராட்டத்துக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பதிவிட்ட மாணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் குபேரன்  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பி.எச்.டி படித்து வருகிறார்.  இவர்,  கடந்த 20-ம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “மாணவ சமுதாயமே.. கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் போராட்டத்திற்காக சிதம்பரம் பூமா கோயிலில் ஒன்று திரளுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

இதைக் காரணம் காட்டி காவல்துறையினர் குபேரனை கைது செய்துள்ளனர்.

 

ஏற்கெனவே, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக முழக்கமிட்ட கல்லூரி மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது.