ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை ஒருமுறையேனும் பயன்படுத்தாதவரா? ஆர்பிஐ புதிய கெடுபிடி

--

டெல்லி: ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனையை பயனாளர் பயன்படுத்தாமல் இருந்தால், அந்த வசதி முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.

வங்கி பரிவர்த்தனை மோசடிகளை தவிர்க்க ஆர்பிஐ இவ்வாறு அறிவுறுத்தி இருக்கிறது. ஒரு வாடிக்கையாளர் தனது டெபிட், கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனையை ஒரு முறை கூட பயன்படுத்தாமல் இருந்தால், அவரது ஆன்லைன் வசதியை ரத்து செய்யுமாறு வங்கிகளுக்கு ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. தற்போது புழக்கத்தில் உள்ள டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இதுவரை ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளாத அட்டைகளுக்கு, அந்த வசதியை ரத்து செய்யப்படும்.

வங்கி அட்டையை பயன்படுத்துவது தொடர்பான பல்வேறு வழி காட்டுதல்களை வங்கிகளுக்கு ஆர்பிஐ பிறப்பித்துள்ளது.  எனவே, இதுவரை ஆன் லைன் பரிவர்த்தனையை மேற்கொள்ளாத டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளுக்கு, விரைவில் அந்த வசதி முற்றிலும் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.