ஒருவரது சமூக வலைதள பதிவுகளையும் அவர் சமூகவலைதளங்களில் நடந்துகொள்ளும் விதத்தையும் வைத்து அவருக்கு பெர்சனல் லோன் கொடுக்கலமா, வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் புதிய வழக்கத்தை சில வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பின்பற்றுகின்றன.

facebook12

இன்ஸ்டாபைசா, கோபேசென்ஸ், ஃபேர்சென்ஸ், கேஷ்கேர் மற்றும் ஓட்4கேஷ் போன்ற தனியார் கடன் வழங்கும் நிறுவனங்கள், தங்களிடம் பெர்சனல் லோனுக்கு விண்ணப்பம் செய்யும் 25 முதல் 35 வயதுக்கு உட்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகவலைதள நடவடிக்கைகளைப் பார்த்து அவர்கள் குணாதிசயம் எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்து முடிவு செய்து பின்னரே அவர்களுக்கு லோன் வழங்குவது பற்றி பரிசீலிக்கின்றன.
மாத வருமானம் வாங்குபர்வகளின் பே-ஸ்லிப், பேங்க் ஸ்டேட்மெண்ட்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து அவர்களுக்கு லோன் தரமுடியும் ஆனால் சொந்த தொழில் செய்பவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போன்றவர்களை இது போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தித்தான் நாங்கள் வரையறுக்க வேண்டியிருக்கிறது என்று அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு நபர் கூகுளில் எதை அதிகம் தேடுகிறார், எந்த மாதிரியான இணையதளங்களை அதிகம் பார்க்கிறார், சமூக வலைதளங்களில் கோபப்பட்டு கருத்துக்களை பகிர்கிறாரா என்பதை பார்ப்பதற்கான வழிமுறைகள் எங்களிடம் உள்ளன. அதுமட்டுமன்றி தங்கள் வருமானத்துக்கு மீறிய செலவுகள் செய்பவரா, குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவரா சூதாடுபவரா அல்லது ஆபத்தான காரியங்களில் ஈடுபடுபவரா போன்ற விஷயங்களைஅலசி ஆராய்ந்த பிறகே லோன் கொடுப்பது பற்றி பரிசீலிப்போம் என்கிறார் இன்ஸ்டாபைசா நிறுவனத்தின் தலைமை இயக்குநர் நிகில் சாமா.
ஏர்லிசேலரி.காம் என்ற விண்ணப்பித்த 17 நாட்களில் லோன் தரும் நிறுவனம், விண்ணப்பதாரரின் ஜி.பி.எஸ் விபரங்கள், பேஸ்புக் மற்றும் லின்க்ட்இன் டேட்டாக்களை சோதித்த பிறகே லோன் தருகிறது. இந்நிறுவனத்தின் இணை-நிறுவனர் அஷோக் மல்ஹோத்ரா இது பற்றி கூறும்போது ஒருமுறை நாங்கள் எங்களிடம் இருமுறை லோனுக்கு விண்ணப்பித்து அதை நிராகரித்தோம், நிராகரித்த சில நிமிடங்களிலேயே அதே ஜி.பி.எஸ் லொகேஷனில் இருந்து அவரது காதலியிடமிருந்து லோன் விண்ணப்பம் எங்களுக்கு வந்தது என்று குறிப்பிடுகிறார்.
பேஸ்புக் மற்றும் லின்க்ட்இன் போன்ற சமூக வலைதளங்களில் ஒரு நபர் இடும் போஸ்ட்டுக்கு எத்தனை லைக்ஸ் வருகிறது, எத்தனை கமெண்ட்டுகள் வருகின்றன, அந்த குறிப்பிட்ட அக்கவுண்ட்டை அவர் எத்தனை காலமாக பயன்படுத்துகிறார் போன்ற அத்தனை தகவல்களும் எங்களது சிஸ்டத்துக்குள் உள்ளீடு செய்யப்பட்டு உடனடியாக அந்த நபர் குறித்த அத்தனை தகவல்களையும் எங்களுக்கு காட்டிவிடும் அளவுக்கு துல்லியமான மென்பொருள் வசதிகள் தங்களிடம் இருப்பதாக நிகில் சாமா கூறுகிறார்.
மேலும் சில வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் இகாமர்ஸ் இணையதளங்கள் மற்றும் டெலிகாம் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு விண்ணப்பதாரர் தனது பில்களை ஒழுங்காக கட்டுபவரா அல்லது டிமிக்கி கொடுப்பவரா போன்ற தகவல்களை திரட்டுகின்றன.
எங்களிடம் உள்ள சாப்ட்வெர் உங்கள் பொருளாதார பரிவர்த்தனைகள் தொடர்பான செய்திகளை மட்டும் சேகரிக்குமே தவிர உங்கள் பெர்சனல் விஷயங்களை படிக்காது. ஆகவே உங்கள் அந்தரங்கங்களை நாங்கள் ஆராய மாட்டோம் என்கிறார் கேஷ்கேர் நிறுவனத்தின் நிறுவனர் விகாஸ் சேகர்.