சென்னை: ஐயப்பனை தவறாக சித்தரித்ததாக இளைஞர் கைது

பரிமலை ஐயப்பனை தவறாக சித்தரித்து முகநூலில் வீடியோ பதிவிட்ட இளைஞரை காவல்துறை  கைது செய்தlது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதற்கு சமூகவலைதளங்களில் ஆதரவு தெரிவித்தும் எதிர்த்தும் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஐயப்பனை தவறாக சித்தரித்து வீடியோ ஒன்றை தமிழ்ச்செல்வன் என்ற பதிவர் பதிவிட்டார். இதை பலரும் பகிர்ந்துவருகின்றனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் குறிப்பிட்ட  வீடியோவைப் பதிவு செய்த தமிழ்ச்செல்வன்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் சென்னையை அடுத்த திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வனை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.