பாஜக தலைவர் தமிழிசையை தாக்க முயன்ற வாலிபர் சிக்கினார்

சென்னை:

சென்னை சிங்கபெருமாள் கோயில் பகுதியில் பாஜக பொதுக்கூட்டம் இன்று இரவு நடந்தது. இதில் மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் திடீரென மேடை ஏறி தமிழிசையை தாக்க முயன்றார்.

அருகில் இருந்தவர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக தமிழிசையை தாக்க முயன்றார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.