டில்லி: ஆன்லைனில் வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தை சுருட்டிய மோசடி வாலிபர் கைது

டில்லி:

டெபிட், கிரெடிட் கார்டு தகவல்களை திருடி பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக வாலிபரை போலீசார் கைது செய்துள்ளது.

டில்லியை சேர்ந்த ஒரு பெண்ணின் கிரெடிட் கார்டு தகவல்களை திருடி ரூ. 50 ஆயிரத்தை ஏமாற்றிய புகாரில் பீகார் முசாப்பர் நகரை சேர்ந்த விகாஸ் ஜா (வயது 27) என்ற வாலிபரை போலீசார் கடந்த பிப்ரவரியில் கைது செய்தனர்.

ஜாமீனில் வெளியே வந்த விகாஸ் தொடர்ந்து இது போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. டில்லியை சேர்ந்த பலரது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களை திருடி பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய சோதனையில் விகாஸிடம் இருந்து லேப்டாப், செல்போன்கள், ஒரு டெபிட் கார்டு, சிம் கார்டுகள் மற்றும் ரூ. 17.70 லட்சத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘‘மக்களிடம் இருந்து அதிகமான புகார்கள் வந்துள்ளது. தொடர் கண்காணிப்புக்கு பின்னர் விகாஸை கைது செய்யப்பட்டார். மோசடி செய்த பணம் மூலம் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். அதிக பணத்தை பயணத்திற்கும், இரவு விடுதிகளுக்கும் செலவு செய்துள்ளார். இ மெயில் ஐடியை ஹேக் செய்து அதன்மூலம் பெறப்படும் தகவல்கள் மூலம் வங்கி கணக்குகளில் கைவரிசையை காட்டியுள்ளார்.

பரிசுதொகை என ஆசை வார்த்தை கூறி செல்போனில் தகவல் அனுப்பி, அவர்களுடைய இ-மெயில் ஐடியை பெற்றுள்ளார். பின்னர் அதனை ஹேக் செய்து வங்கி கணக்கில் மொபைல் எண்ணையும் மாற்றியுள்ளார். இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஒடிபி செல்லாது. மோசடியின் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை தன்னுடைய கணக்கிற்கு மாற்றியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள விகாஸ் ஜா பீகார் மாநிலம் முசாப்பர்பூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. போலீஸ் மற்றும் சைபர் கிரைம் போலீஸ் விசாரணையை விஸ்தரித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: youth arrested in delhi for online banking frauds and stole customers amount, டில்லி: ஆன்லைனில் வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தை சுருட்டிய மோசடி வாலிபர் கைது
-=-