Random image

முகநூலில் காலா படத்தை லைவாக வெளியிட்டவர் கைது

 

சிங்கப்பூர்

டிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தை நேரடியாக முகநூலில் ஒளி பரப்பியதற்காக ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா திரைப்படம் நேற்று வெளிநாடுகளில் வெளியாகி உள்ளது.   அவ்வாறு சிங்கப்பூரில் வெளியான இப்படத்தை பல ரசிகர்கள் கண்டு களித்தனர்.   அவர்களில் பிரவீன் என்னும் வாலியரும் ஒருவர் ஆவார்.

இவர் திரையரங்கில் தான் காலா படத்தை பார்க்கும் போதே தனது மொபைல் மூலம் தனது முகநூல் பக்கத்தில் நேரடியாக காலா படத்தை ஒளிபரப்பி உள்ளார்.   இதை உலகெங்கும் பலரும் பார்த்துள்ளனர்.   இவ்வாறு இந்தப் படம் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் ஓடி உள்ளது.

இதை அறிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் திருட்டு விசிடி தடுப்புப் பிரிவு புகார் அளித்தது.   அந்தப் புகார் உடனடியாக சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு சிங்கப்பூரில் பிரவீன் கைது செய்யப்பட்டுள்ளார்.