காவிரிக்காக தீக்குளித்த இளைஞர் சீரியஸ்

--

சென்னை:

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவைக் கண்டித்து இன்று நாம் தமிழர் கட்சி நடத்திய பேரணியின் போது  தீக்குளித்த  விக்னேஷ்  மருத்துவமனையில் ஆபத்தானகட்டத்தில் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவிரியில் தமிழகத்துக்கான நீரை  தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து, சென்னையில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று காவிரி உரிமை மீட்பு பேரணி நடைபெற்றது.

 

விக்னேஷ்
விக்னேஷ்

இந்த பேரணி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தொடங்கி புதுப்பேட்டை வரை நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சேரன், அமீர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இப்பேரணி புதுப்பேட்டை பகுதியை நெருங்கும்போது, ஊர்வலத்தில் வந்த ஒரு இளைஞர் திடீரென  தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டார். சுற்றிலும் இருந்தவர்கள், நெருப்பை அணைத்து, அவரை மருத்துமனையில் சேர்த்தனர்.

தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆபத்தான கட்டத்தில் அவர் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கி்ன்றன.

தீயில்..
தீயில்..

அவர் பெயர் பா. விக்னேஷ்.  மன்னார்குடியைச் சேர்ந்த அவர், நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மேற்கு மாவட்ட  மாணவர் பாசறை செயலாளராக இருக்கிறார்.