Random image

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம்! தானம் கொடுத்த இளைஞர்  தற்கொலை முயற்சி!

கர்ப்பிணிக்கு எச்ஐவி நோய் தொற்று இருந்த ரத்தம் ஏற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியான நிலையில், அந்த ரத்தத்தை தானமாக கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஒருவரின் மனைவி 2-ஆவது முறையாக கர்ப்பம் தரித்தார். அவருக்கு ரத்தசோகை இருந்ததால்  சிவகாசியிலிருந்து தானமாக பெறப்பட்ட ரத்தம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்டது.

இந்த நிலையில் அந்த பெண்ணின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. பரிசோதனை செய்ததில், அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருந்த ரத்தம் ஏற்றபப்ட்டது தெரியவந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தத்தை தானமாக கொடுத்த குறிப்பிட்ட இளைஞர் வெளிநாடு செல்வதற்காக மதுரையில் ரத்தத்தை பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு எச்ஐவி நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிவகாசி மருத்துவமனைக்கு சென்று அந்த ரத்தத்தை யாருக்கும் தானம் செய்து விட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்குள் அந்த ரத்தம் சாத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது.

தன்னால் ஒரு பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டதே என்ற மன உளைச்சலில், ரத்ததானம் செய்த ளைஞர் இதனிடையே   ராமநாதபுரத்தில் எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று தகவல் வெளியாகி உள்ளது.

19 வயதான அந்த இளைஞர் கமுதியை சேர்ந்தவர் என்றும் அவர் சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்ததும் தெரியவந்திருக்கிறது.