திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது பிறந்த தினத்தன்று கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் போது மரணம் அடைந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரத்தூர் என்னும் சிற்றூரை சேர்ந்தவர் சம்பத்குமார்.  இவருக்கு நேற்று 24 வயது நிறைவடைந்தது. சம்பத்குமார் வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.  இந்த சிற்றூர் சென்னையி8ல் இருந்து 40 கிமீ தூரமுள்ள திருநின்றவூர் அருகில்  உள்ளது.  சம்பத்குமாரின் நெருங்கிய நண்பர் நரேந்திரன் என்பவரும் இதே சிற்றூரில் வசித்து வருகிறார்.

பிறந்த நாளை முன்னிட்டு திருநின்றவூரில் ஆசிரமம் நடத்தி வரும் சந்தானம் என்பவரிடம் ஆசி பெற சம்பத்குமார் தனது நண்பர் நரேந்திரனுடன் சென்றுள்ளார்.  அவருக்கு ஆசி வழங்கிய சந்தானம் ஆசிரம வளாகத்தில் உள்ள தனது வீட்டின் கழிவுநீர் தொட்டில் அடைப்பு உள்ளதாகவும் அதைச் சரி செய்யுமாறும் சம்பத்குமாரிடம் கூறி உள்ளார்.

அதனால் சம்பத்குமார் அந்த தொட்டியின் மேன்ஹோல் வழியாக உள்ளே சென்றுள்ளார்.   உள்ளே இருந்த விஷவாயு தாக்கியதால் தனது பிறந்த நாள் அன்று சம்பத் குமார் உயிரிழந்தார்.   இதைத் தெரியாத நரேந்திரன் அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் உள்ளே இறங்கி உள்ளார்.  அவரையும் விஷவாயு தாக்கி உள்ளது.

விவரம் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் கழுவு நீர் தொட்டியின் உள்ளே இருந்து சம்பத்குமாரின் சடலத்தையும் மயங்கிக் கிடந்த நரேந்திரனையும் மீட்டுள்ளனர்.   நரேந்திரன் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர் குழு அவர் விஷ வாயு தாக்கி உயிர் இழந்ததை உறுதி செய்துள்ளது.  நரேந்திரன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து திருநின்றவூர் காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப் பதிந்துள்ளனர்.   ஆசிரம நிர்வாகி சந்தானம் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.