Random image

தாய்லாந்து குகையில் சிக்கிய 6 சிறுவர்கள் மீட்பு

பாங்காக்:

தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த சிறுவர்களில் 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தின் தாம் லுவாங் என்ற குகையில் கால்பந்து அணியை சேர்ந்த 12 சிறுவர்களும், பயிற்சியாளரும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நீண்ட போராட்டத்திற்கு பின் 6 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீட்கப்பட்ட சிறுவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சியாங்ராய் மாகாணத்தின் மருத்துவ அதிகாரி பூன்தோங் கூறுகையில், “வெளியே கொண்டு வரப்பட்டுள்ள சிறுவர்கள் இப்போது மீட்பு குழு மையத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,” என்றார். மற்ற சிறுவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.