அரபு நாட்டு லாட்டரியில் 39 கோடி ரூபாய் பரிசை வென்ற கேரள இளைஞர்…

 

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் அப்துஸ் சலாம். இவர் ஐக்கிய அரபு அமீரகமான மஸ்கட்டில் ‘ஷாப்பிங்’ மையம் வைத்துள்ளார்.

மஸ்கட்டில் அவர் அண்மையில் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். இந்த ஆண்டின் முதல் குலுக்கான அந்த லாட்டரியில் அப்துஸ் சலாமுக்கு முதல் பரிசு விழுந்துள்ளது.

பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

39 கோடி ரூபாய்.

கடந்த மாதம் 29 ஆம் தேதி லாட்டரி டிக்கெட் வாங்கிய சலாம், லாட்டரி ஏஜெண்டுகளிடம் தனது கோழிக்கோடு செல்போன் எண்ணை கொடுத்துள்ளார்.

இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை குலுக்கல் நடந்து முடிவு வெளியான நிலையில், ஏஜெண்டுகளால் சலாமை தொடர்பு கொள்ள முடியவில்லை.

நண்பர்கள் மூலம் மறுநாளில், தான் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசு கிடைத்தது அவருக்கு தெரிய வந்துள்ளது.

“அந்த சீட்டை நண்பர்களுடன் சேர்ந்து வாங்கியதால் பரிசு பணத்தை சரி சமமாக பங்கிட்டு கொள்வோம்” என சலாம் தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி