டில்லி:

துப்பாக்கியை கொண்டு சுடுவது போன்று நண்பர்கள் சிலர் சேர்ந்து  ‘டிக்டாக்’ வீடியோ எடுத்தபோது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஞ்ஞான வளர்ச்சியை பலர் தேவைகளுக்காக பயன்படுத்தி வரும் நிலையில், பலர் அதை அழிவு பாதைக்கும் உபயோகப்படுத்தி வருகின்றனர்.

ஸ்மார்ட் போனில்,  பாடல்கள் பாட விரும்புபவர்களின் திறமையை ஊக்கப்படுத்த வும்,உற்சாகப் படுத்தவும்  டிக்டாக் எனப்படும் மியூசிக்கல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில், ஒருசிலரின் அதீத அசை மற்றும் வல்கரான சிந்தனை காரணமாக,  பாட்டு என்ற அவறுவறுப்பான அங்க அசைவுகளை பதிவேற்றி துஷ்பிரயோகத் துக்கும்  பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். இதற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் இதுதொடர்பான புகாரின்பேரில், சென்னை உயர்நீதி மன்றம் டிக்டாக் செயலிக்கு தடை விதித்து, இதுகுறித்து உடனே அறிவுறுத்த மத்திய அரசையும் வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியின் ஜப்ராபாத் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சல்மான், தனது நண்பர்களுடன் சேர்ந்து டிக்டாக் செயலி மூலம் வீடியோ எடுத்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு இந்தியா கேட் பகுதிக்கு காரில் சென்ற சல்மான் மற்றும் அவரது நண்பர்கள், டிக்-டாக் செயலி மூலம் துப்பாக்கியை வைத்து வீடியோ பதிவு செய்ய முயன்றுள்ளனர். சல்மான்  காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்தவாறு, அவரது   கன்னத்தில் நாட்டு துப்பாக்கியை மற்றொரு நண்பரான சொகைல் வைத்து வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததில், சல்மான் கழுத்தில் குண்டு பாய்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், உடனே அவரை அருகிலுள்ள  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள், கூற, நண்பர்கள் அனைவரும் எஸ்கேப்பாகினர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரை  தொடர்ந்து காவல்துறையினர், சல்மான் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய நிலையில், உயிரிழந்த சல்மானின் 3 நண்பர்களான  சோஹைல், அமிர், ஷெரிப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சல்மானின் தந்தை பிசினஸ்மேன் என்று கூறப்படுகிறது. சல்மானுக்கு ஒரு சகோதரன் மற்றும் சகோதரி உள்ளனர். சமீபத்தில்தான் அவரது சகோதரிக்கு திருமணம் நடைபெற்றதாகவும், அந்த சந்தோஷம் மறைவதற்குள் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.