காஷ்மீர்: பாதுகாப்பு படை துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் பலி

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் நவ்போரா லஸ்ஸிபோரா பகுதியில் பயங்கரவாதியின் வீட்டை பாதுகாப்பு படையினர் இன்று சுற்றிவளைத்தனர்.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பு படையினரை சூழ்ந்தனர். அவர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். கூட்டத்தினர் கற்களை வீசி பாதுகாப்பு படையினரை தாக்கினர்.

அப்போது பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் விகாஸ் அகமது ரத்தர் என்ற வாலிபர் உயிரிழந்தார். ஒரு பெண் உள்பட 2 பேர் காயமடைந்துள்ளனர். அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.