கொடைக்கானலில் இளைஞர் கொலை:  மனைவி – ஆண் நண்பர் கைது

கொடைக்கானலில் கணவரை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தப்பியோடிய மனைவியும் அவரது ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பெரியகுளம் அருகே கொடைக்கானல் சாலையில் டம்டம் பாறை அருகே கடந்த 18-ம் தேதி இளைஞர் ஒருவரின் பிணம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

இறந்துகிடந்தவரின்  உடையிலிருந்த அடையாளம், மற்ற விபரங்களைச் சோதித்ததில் அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் என்பது தெரியவரவே, .

அம்மாநில காவலர்களை, தொடர்பு கொண்டனர்.

கொலையான இளைஞர் மங்களூரைச் சேர்ந்த முகமது ஷமீர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்  கடந்த 14-ம் தேதி மனைவி பர்தோஷ் மற்றும் 3 மாதக் குழந்தையுடன் கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவரது மனைவி பர்தோஷை காணவில்லை என்றும் தெரியவந்தது.

இதையடுத்து ப்ர்தோஷை தேவதானப்பட்டி போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை நடந்து 20 நாட்களுக்குப் பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் அருகே பர்தோஷை பிடித்தனர்.அவருடன் அவரது ஆண் நண்பர் ஆசிப் என்பவரும் இருந்தார்.

கொலை செய்த மனைவி பர்தோஷ் – அவரது ஆண் நண்பர் ஆசிப்

இருவரிடமும் காவலர்கள் விசாரணை நடத்தினர்

கொலையுண்டு கிடந்த முகம்மது ஷமீருக்கும் பர்தோஷுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணமானது. மூன்று மாதங்களுக்கு முன்  ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கிடையே பர்தோஷூக்கு  வாடகை கார் ஓட்டும் ஆசிப் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் கணவர் முகம்மது ஷமீரை தனது ஆண் நண்பர் ஆசிப்புடன் சென்றுவிட பர்தோஷ் முடிவு செய்துள்ளார்.

இதற்காக சுற்றுலா செல்லலாம் என்று கணவரை அழைத்துக்கொண்டு, ஆசீப்பின் வாடகைக் காரில் கொடைக்கானல் வந்தார்.

டம்டம் பாறை அருகே தனிமையான இடத்துக்குச் கணவரை அழைத்துச்சென்றார். அங்கு அவருக்கு இளநீரில் மயக்க மருந்தை கலந்து கொடுத்தார். பிறகு ஆண் நண்பர் ஆசிப்புடன் சேர்ந்து கழுத்தை அறுத்து கணவரைக் கொன்றார்.  பிறகு தனியான இடத்தில் உடலை  வீசி விட்டனர்.

கொலையுண்ட முகமது ஷமீர்

பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டனர். அங்கு உறவினர்கள் பர்தோஷிடம் கணவர் எங்கே என்று கேட்க ஏதேதோ சொல்லி மழுப்பியிருக்கிறார். ஒருகட்டத்தில் உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

உடனே பர்தோஷ், வீட்டிலிருந்த 60 பவுன் நகையை எடுத்துக்கொண்டு ஆண் நண்பர் ஆசிப்புடன் தலைமறைவாகிவிட்டார். மூன்று மாத குழந்தையையும் விட்டுச் சென்றுவிட்டார். இருவரும் பல இடங்களில் சுற்றித்திரிந்தனர்.

இந்த நிலையில்தான் காவலர்களிடம் சிக்கினர். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.