கற்பழித்த பெண்ணை மனைவியாக்கி, பிறந்த குழந்தையை ரூ.25,000க்கு விற்ற கொடூரக் கணவன்

--

சமுதாயத்தில் வற்புறுத்தலுக்கு பயந்து கற்பழித்த பெண்ணையே மணந்து பிறகு தனக்கு பிறந்த குழந்தையை 25,000 ரூபாய்க்கு விற்றுவிட்டு மனைவியையும் விவாகரத்து செய்த கொடூரமான கணவன் மீது போலீஸ் வழக்குப்பதிவு விசாரணை நடத்து வருகிறது.

woman_victim

உத்திரப் பிரதேச மாநிலம் பரெய்லி நகரத்தை சேர்ந்த ஒரு 25 வயது பெண் கொடுத்த புகார் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அதே பகுதியில் வசிக்கும் சாவேஸ் என்ற எம்ப்ராய்டரி துணிகளை விற்கும் தொழில் செய்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி வீட்டுக்கு வருவது போவதுமாக இருந்திருக்கிறார். தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் வாக்குறுதி கொடுத்து தன்னுடன் உடலுறவு கொண்டதாகவும், தான் கர்ப்பமானது தெரிந்தவுடன் தம்மை மிரட்டியதுடன் தன்னை விட்டு விலக முயற்சித்ததாகவும், பின்னர் சமூகப் பெரியவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால் குழந்தை பிறந்தவுடனே அக்குழந்தையை குழந்தைகளில்லாத ஒரு தம்பதிக்கு ரூ.25,000-க்கு விற்றது மட்டுமன்றி தன்னையும் விவாகரத்து செய்து, 7 குழந்தைக்கு தகப்பனான ஒரு முதியவருக்கு திருமணம் முடித்து வைக்க முயன்றதாகவும் புகார் அளித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு இதுகுறித்து அப்பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த போது சாவேஸ் என்ற அந்த நபரும் அவரது குடும்பமும் பயந்து போய் அப்பெண்ணுடன் சமரச ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்துள்ளனர். பிரச்சனை முடிந்ததும் சாவேஸ் தனது பழைய முகத்தை மறுபடி காட்ட ஆரம்பித்துள்ளான். இதனால் அப்பெண் மறுபடி போலீஸ் உயரதிகாரியின் உதவியை நாடியிருக்கிறார்.

தான் சாவேஸ் என்ற அந்த நபரால் கடந்த 3 ஆண்டுகள் கடும் துயருக்கு ஆளானதாகவும் அவனும் அவனது குடும்பமும் தண்டனை பெற வேண்டும், தனக்கு தனது குழந்தை திரும்ப வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.