யூத் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்

யூத் ஒலிம்பிக் போட்டியில் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சவுரப் சௌத்ரி தங்கம் வென்று வரலாறு சாதனை படைத்துள்ளார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.

saurabh

அர்ஜெண்டினாவில் உள்ள பூனாஸ் ஏர்ஸில் நகரில் மூன்றாவது யூத் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் வீரர், வீராங்கனைகளை பங்கேற்று விளையாடி வருகின்றனர். இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சவுரப் சௌத்ரி பங்கேற்று தங்கம் வென்று அசத்தி உள்ளார்.

இவர் இலக்கை 580 புள்ளிகளில் குறிவைத்து சுட்டு முதலிடம் பிடித்தார். 16 வயதே நிரம்பிய சவுரப் சௌத்ரி ISSF உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளார்.

இதற்கு முன்னதாக நடைபெற்ற பெண்கள் பிரிவிற்கான 10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 16 வயதுடைய இந்தியாவின் மனு பாகர் பங்கேற்று தங்கம் வென்றார்.

இதற்கு முன்பு நடைபெற்ற யூத் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றதில்லை. தற்போது நடைபெற்று வரும் இந்த யூத் ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கம், 3 வெள்ளிப்பதக்கம் என இந்தியா 6 பதக்கங்களை பெற்றுள்ளது.