யூத் ஒலிம்பிக்ஸ்: அர்ஜெண்டினாவில் இன்று தொடக்கம்

18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கான இளையோர் ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது. அர்ஜெண்டினா வில் ப்யூனோஸ் எயர்ஸ் நகரில் கோலாகலமாக போட்டிகள் இன்று தொடங்குகிறது.

ஏற்கனவே கடந்த 2016ம்ஆண்டு  கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்றது.  அதைத் தொடர்ந்து அர்ஜெண்டினாவில் ப்யூனோஸ் எயர்ஸ் நகரில்  18 வயதுக்குட்பட்டோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.

இந்த விளையாட்டு போட்டியில் மொத்தம் 34 விளையாட்டுகள் இடம்பெறுகின்றன. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3998 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் மொத்தம் 47 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இன்று தொடங்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகள் வரும் 18ந்தேதிவரை நடைபெற உள்ளது.

இதை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வலைதலைள நிறுவனம், டூடுள் வெளியிட்டு சிறப்பித்து உள்ளது.