பிபல்கோடி, உத்தரகாண்ட்

த்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சாகர் ஷா என்னும் இளைஞர் ‘கேட்’ தேர்வில் ஒரே முறை எழுதி தேர்ச்சி பெற்ற போதும் தற்போது பகோடா விற்று வருகிறார்.

பொறியியல் மற்றும் விஞ்ஞான துறையில் பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்காக ’கேட்’ எனப்படும் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு ஐ ஐ எஸ், மற்றும் ரூர்கி, டில்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், சென்னை மற்றும் மும்பை ஐஐடியில் மாணவர் சேர்ககிக்காக நடத்தப் படுகிறது. மேலும் பல மாநில கல்வி நிலையங்களிலும் இந்த கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்ட மேற்படிப்புக்கு சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தை சேர்ந்த பிபல்கோடி என்னும் சிற்றூரை சேர்ந்த இளைஞர் சாகர் ஷா ஆவார். இவர் ஒரு சாதாரண நடுத்தர வகுப்பு குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். டேராடூனில் ஒரு கல்லூரியில் சிவில் பட்டம் பெற்ற இவருக்கு பட்ட மேற்படிப்பு படிக்க வேண்டும் என்னும் கனவு இருந்தது. அதை ஒட்டி அவர் கேட் தேர்வு எழுத விண்ணப்பித்தார்.

அந்த ஊரில் கேட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் இல்லாததால் அவர் தானாகவே ப் அடித்தார். ஒரே முறை தேர்வு எழுதி இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆயினும் அவரால் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை மட்டுமே பெற முடிந்தது. காரணம் சரியான பயிற்சி இன்மை ஆகும். இதனால் அவர் ஆசைப்பட்ட பட்டமேற்படிப்பு கல்வியில் சேர முடியாத நிலை உண்டானது.

 

அவருடைய குடும்பத்தினர் அதே ஊரில் ஒரு தின்பண்டங்கள் விற்கும் கடையை நடத்தி வருகின்றனர். அந்த கடைக்கு ஷாஜி பகோடா கடை எனப் பெயர் ஆகும். அந்த ஊரில் அக்கடை பிரபலமாக இருந்தது. பட்டமேற்படிப்பு படிக்க ஆசைப்பட்ட இளைஞர் பக்கோடா கடையில் அமர்ந்து வர்த்தகம் செய்ய தொடங்கினார்.   தற்போது தனது கனவுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு பகோடா வர்த்தகத்தை கவனித்து வருகிறார்.