மதுரையில் இளைஞர் தற்கொலை முயற்சி: புளுவேல் விளையாட்டு காரணமா?

மதுரை:

துரை இளைஞர் ஒருவர் கையில் அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிககப்பட்டுள்ள நிலையில், அவர் புளுவேல் விளையாட்டு காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என விசாரணை நடை பெற்று வருகிறது.

மதுரை நேதாஜி சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவரின் மகன் விக்னேஷ்.  இளைஞரான இவர் வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு கையை அறுத்து  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் அவரிடம் திடீர்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ப்ளுவேல் கேம் காரணமாக தற்கொலை முயற்சி செய்தாரா என விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி புளுவேல் ஆன்லைன் தற்கொலை விளையாட்டுக்கு அடிமையாகி பலரும் உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டிலும் பலர் இந்த விளையாட்டு காரணமாக தற்கொலை முடிவை நாடினர்.

இதையடுத்து, மத்திய மாநில அரசுகள் சார்பில், காவல்துறையினர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் தற்போது மீண்டும் மதுரையில் இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி