சென்னை விமானநிலைய மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை: பரபரப்பு

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள மேம்பாலத்தில் இருந்து இன்று காலை ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று அதிகாலை சுமார் 6 மணி அளவில், சென்னை,  உள்நாட்டு விமான நிலையத்தின் நான்காவது வாயில் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து  இளைஞர் ஒருவர்  தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்ட பயணிகள் அலறி அடித்து ஓடினர்.

இந்த  சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த விமான நிலைய பாதுகாப்பு போலீசார், இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயர் சைத்தன்யா, வயது 30 என்பது தெரிய வந்துள்ளதாகவும், அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற விவரம் தெரியவில்லை.

இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.