இத்தாலிப் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த இந்திய வாலிபருக்கு அடி உதை

சென்னை

த்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்த இந்திய வாலிபருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.

 

இத்தாலி நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் கணவர் சென்னையில் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி புரிகிறார்.   கணவரைக் காண வந்த அந்த 28 வயது இத்தாலிப்பெண் எம் ஆர் சி நகரில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார்.   நேற்று அந்தப் பெண் தனது அறைக்கு திரும்பி உள்ளார்.

லிப்டில் அவருடன் ஒரு இளைஞர் மட்டும் இருந்துள்ளார்.  திடீரென அந்த இளைஞர் இத்தாலிப் பெண்ணை கட்டி அணைத்து உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார்.   அதிர்சி அடைந்த அந்தப் பெண் உடனடியாக லிப்டிலிருந்து வெளியே வந்து கூச்சல் இட்டுள்ளார்.   அதைக் கேட்ட ஓட்டல் ஊழியர்கள் அந்த இளைஞரை அடித்து உதைத்துள்ளனர்.

அதன் பிறகு அந்த இளைஞர் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளார்.   அங்கு விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி பகுதியை சேர்ந்தவர் என்பதும் 28 வயதான அந்த இளைஞர் பெயர் ஹரிஷ் குமார் என்பதும் தெரிய வந்துள்ளது.

அவருடைய பெரியப்பா மகளின் திருமணம் அருகில் நடந்துள்ளது.   அப்போது அவர் மது அருந்திவிட்டு தனது அறைக்கு திரும்பிய போது குடி போதையில் அந்த இத்தாலி நாட்டுப் பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்டுள்ளார்.   தற்போது ஹரீஷ்குமார் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார்.