எச் ஐ வி தொற்று ரத்தத்தை தானம் செய்த இளைஞர் மரணம்

துரை

எச் ஐ வி தொற்று ரத்தத்தை தானம் அளித்த வாலிபர் மதுரையில் மரணம் அடைந்துள்ளார்.

 

கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதி கமுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிவகாசியில் ரத்த தானம் செய்தார். அந்த ரத்தம் சாத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு வந்த எட்டு மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஏற்றப்பட்டது. அவருக்கு ரத்தத்தில் சிவப்பு அனுக்கள் குறைவாக இருந்ததால் சிவகாசி ரத்த வங்கியில் இருந்து ரத்த்ம் பெறப்பட்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதன் பிறகு நான்கு நாட்களில் அந்த பெண்ணுக்கு வாந்தி மயக்கம் உண்டானதால் அவர் மீண்டும் சாத்தூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு ரத்தத்தில் எச் ஐ வி வைரஸ் இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. மேலும் விசாரித்த போது சிவகாசி ரத்த வங்கியில் இளைஞர் அளித்த ரத்தத்தில் எச் ஐ வி தொற்று இருந்தது பரிசோதனை செய்யப் படாமலே கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்டது தெரிய வந்தது.

இதை அறிந்த அந்த ரத்தம் வழங்கிய இளைஞர் கடும் மன உளைச்சல் அடைந்தார். க்டந்த 23 ஆம் தேதி அன்று அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த இளைஞர் மதுரை அர்சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் இன்று மரணம் அடைந்தார்.