Random image

நெல்லை: பெட்ரோல் நிலைய தீ விபத்தில் சிக்கிய வாலிபர் உயிரிழப்பு

திருநெல்வேலி:

பெட்ரோல் நிலைய தீ விபத்தில் சிக்கிய வாலிபர் உயிரிழந்தார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ஆல்வின். இவர் கடந்த 13-ம் தேதி புது பைக்கில் பெட்ரோல் நிரப்ப சென்றார். ஆயிரம் ரூபாய்க் க்கு பெட்ரோல் நிரப்பும்படி கூறிவிட்டு வாகனத்திலியே அமர்ந்திருந்தார்.

டேங்க் நிரம்பி பெட்ரோல் வெளியே சொட்ட ஆரம்பித்தது. இதை கவனித்த பங்க் ஊழியர் அவசர அவசரமாக பம்பை வெளியே எடுத்தார். அப்போது பம்பில் இருந்த பெட்ரோல் துளிகள் ஆல்வி மற்றும் வண்டியின் மீது பட்டது. ஏற்கனவே சூடாக இருந்த பைக் உடனே தீப் பற்றி எரிய தொடங்கியது.

இதுல் பைக் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. பைக் மீது அமர்ந்திருந்த வாலிருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. உடனே பங்க் ஊழியர்கள் தீயை அணைத்தனர். ஆல்வின் தீ காயத்துடன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இன்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.