டெல்லி: இளைஞர்களிடையே பிரபலமானபப்ஜிவிளையாட்டுக்கு இந்திய அரசு, அதிரடியாக தடை போட்ட நிலையில்பப்ஜி போஸ்டருடன் இளைஞர்கள் இறுதி ஊர்வலம் நடத்தி அதகளப் படுத்தி உள்ளனர்.

இந்தியா சீனாவுக்கு இடையே மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், ஏராளமான சீனா மொபைல் செயலிகளுக்கு மத்தியஅரசு தடை விதித்து வருகிறது. ஏற்கனவே டிக்டாக் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் பிரபல விளையாட்டு செயலியான பப்ஜி உள்பட 59 செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்தது.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றின் பாரபட்சமற்ற செயல்களில் ஈடுபடுவதற்காகமின்னணு மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் 118 சீன ஆப்ஸ்களை மத்திய அரசாங்கம் தடைசெய்வதாக அறிவித்தது.

பப்ஜி விளையாட்டுக்கு இந்தியாவில் அதிக அளவிலான பயனர்கள் இருந்து வந்தனர். சிறுவர்கள், மாணவர்கள், முதியர்கள் என என கோடிக்கணக்கானோர் இந்த கேமுக்கு அடிமையாகி இருந்தனர்.

மத்திய அரசின் தடை உத்தரவையடுத்து, உடனடியாக இந்த செயலி, கூகிள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து   அகற்றப்பட்டது. மேலும் ஏற்கனவே டவுன்லோடு செய்திருப்பவர்களும் இனி விளைடாட இயலாத வகையில் மாற்றம் செய்யப்பட்டது.

இதனால் பலர் சோகமடைந்த நிலையில், பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் பப்ஜின் உருவ படத்திற்கு மாலை அணிவித்த சுவரொட்டியை அதன் ரசிகர்களின் தோள்களில் சுமந்துகொண்டு, வெள்ளை நிற உடையணிந்து இறுதி ஊர்வலம் நடத்தி அதகளப்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்என்று கோஷமிட்டபடி ஊர்வலம் சென்ற இளைஞர்கள், பின்னர் இறுதி சடங்கு நடத்தி, தங்களின் பப்ஜி மோகத்தை தீர்த்துக்கொண்டனர்.