உலகளாவிய திரைப்பட விழா ‘வீ ஆர் ஒன்’ நாளை தொடக்கம்….!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகெங்கும் திரைப்பட விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது . உலகமே ஊரடங்கில் உள்ளது .

இந்த நிலையில் பிரபலமான திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்ட படங்களை யூடியூபில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளநன.

இந்த நிகழ்ச்சி வீ ஆர் ஒன் என்ற பெயரில் மே 29 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.இந்த நிகழ்வில் பெர்லின், கேன்ஸ், வெனிஸ், சன்டான்ஸ், டொரொன்டோ மற்றும் டிரிபெகா திரைப்பட விழாக்கள் இணைந்து திரைப்படங்களை ஒளிபரப்ப இருக்கின்றன.

ஜெருசலேம், மும்பை, சரஜீவோ, சிட்னி, டோக்கியோ மற்றும் லண்டன் திரைப்பட விழாக்களும் இந்நிகழ்வில் பங்கு பெற இருக்கின்றன. இந்த திரைப்படங்களை யூடியூபில் இலவசமாகப் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் உலக சுகாதார நிறுவனத்திற்கு நன்கொடை திரட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.