ஆதாம் சாலே, நியூயார்க்கை இவர் யூடியூபில் குறும்பு (prank) வீடியோக்கள் தயாரித்து வெளியிட்டு பிரபலமானவர். இவர் தாம் சமீபத்தில் லண்டனிலிருந்து நியூயார்க் செல்லும் டெல்ட்டா விமானத்தில் அமர்ந்து அரபி மொழியில் தனது தாயாருடன் பேசியதால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாக அந்த விமான நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

ஆதாமின் தாயாருக்கு அரபி மட்டுமே தெரியும் என்பதால் அவருடன் சில வினாடிகள் மட்டுமே மொபைலில் பேசிவிட்டு கட் செய்திருக்கிறார். அவருக்கு அருகாமையில் இருந்த பெண்மணி ஒருவர் “நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் பேசக்கூடாது, நீங்கள் பேசும் மொழி எனக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது” என்று சொல்ல அங்கு சிறிய வாக்குவாதம் எழுந்திருக்கிறது. அங்கிருந்த சிலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாக பேசியுள்ளானர். இதையட்டுத்து அந்த பெண்மணி விமான ஊழியர்களிடம் சொல்ல அவர்கள் வலுக்கட்டாயமாக ஆதாமையும் அவரது நண்பரையும் விமானத்தைவிட்டு வெளியேற்றியிருக்கிறார்கள்.

[embedyt] http://www.youtube.com/watch?v=2qc3-wQUK_k[/embedyt]

இப்பிரச்சனை நடைபெற்ற இடத்தில் அந்த விமானத்திலிருந்தபடியே பேசி பதிவு செய்த காட்சியை ஆதாம் வெளியிட்டுள்ளார். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேற்று மொழியில் பேசிய ஒரே காரணத்துக்காக ஒரு பயணியை விமானத்திலிருந்து வெளியேற்றுவதா என்று பலரும் கண்டணம் தெரிவித்துள்ளனர். இந்த 2016 ஆம் ஆண்டிலும் கூட சில நிறவெறியும் பிடித்த மனிதர்கள் இருக்கிறார்களே என்று வேறு சிலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து ஆதாம் வெளியிட்டுள்ள ட்வீட் கிட்டத்தட்ட 693,666 பேரால் ரீட்விட் செய்யப்பட்டுள்ளது.
 
YouTube star allegedly kicked off Delta flight ‘for speaking Arabic’ is known for pranks