அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் யூ-டியூப் சேனல் முடக்கம்

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வன்முறையை தூண்டும் விதமாக செயல்படுவதாக கூறி, அவரது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களை அந்நிறுவனங்கள் தடை செய்துள்ளன.

இந்நிலையில், மற்றொரு முக்கிய சமூக வலைத்தளமான யூ-டியூப் நிறுவனமும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் யூ-டியூப் சேனலான ‘டொனால்ட் டிரம்ப் சேனல்’லை முடக்கியுள்ளது.

அதிபர் டிரம்ப்-பின் சேனலில் ஆட்சேபகரமான கருத்துகளை பதிவிடுவதாக கூறி, அடுத்த ஒரு வாரத்திற்கு இந்த சேனலில் எந்த வீடியோ-வும் பதிவிட முடியாது என்று கூறியிருக்கிறது.

நிலைமையை பொறுத்து தடை நீடிக்கபடுமா என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக சி.என்.என். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.