‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தில் இணைந்த யூ-டியூப் பிரபலம்….!

ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் படம் ‘முருங்கைகாய் சிப்ஸ்’ .

இதில் அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும், இதில் பாக்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரவீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்ரவர்த்தி, எடிட்டராக ஜோமின் மேத்யூ, கலை இயக்குநராக நர்மதா வேணி, இசையமைப்பாளராக தரண் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்நிலையில் இந்நிலையில் இப்படத்தில் முக்கிய யூ-டியூப் பிரபலம் ஒருவர் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் இதை தனது முகநூல் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தில் ‘செர்டிஃபைடு ராஸ்கல்ஸ்’ என்ற சேனலின் மூலம் பிரபலமான ஸ்ரீராம் க்ரிஷ் இணைகிறார் என்பதை அறிவிப்பதில் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் மகிழ்கிறது.’ என்று கூறியுள்ளார்.