ஆந்திரா : நாளை முழு அடைப்பு நடத்த உள்ள ஜெகன்மோகன் ரெட்டி

மராவதி

ந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை ஒட்டி ஆந்திரா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.    ஆந்திர மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நாளை (16.04.2018) அன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி தனது அறிக்கையில், ”ஆந்திர மக்களுக்கு பிரதமர் மோடி கடும் அநீதி இழைத்து வருகின்றார்.   கடந்த 4 ஆண்டுகளாக முதல்வர் சந்திரபாபு நாயுடு இதை கண்டுக் கொள்ளவில்லை.   தற்போது ஆந்திர மக்களிடம் நற்பெயரைப் பெற பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளார்.   இந்த நடவடிக்கை வெறும் கண் துடைப்பு நாடகமே.

எனவே ஆந்திர மாநில எதிர்க்கட்சிகள் இணைந்து வரும் திங்கட் கிழமை அன்று முழு அடைப்பு நடத்த உளது.   ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நடைபெறும் இந்த முழு அடைப்புக்கு பொது மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்”  என தெரிவித்துள்ளார்.