எதிர்க்கட்சிதலைவர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு: ஆந்திர அரசு மீது சந்திரபாபு நாயுடு புகார்

விசாகப்பட்டினம்: எதிர்க்கட்சிதலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி உள்ளார்.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அரசு, எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசிகளை அழைப்புகளை ஒட்டுகேட்பதாக குற்றம்சாட்டி உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, இதுபற்றி உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ஜெகன்மோகன் கட்சி  ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, மாநிலத்தில் ஜனநாயக சக்திகள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. சட்டப்படி எதையுமே பின்பற்றுவது இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் போன்ற நிகழ்வுகள் என்றால் மட்டும் தொலைபேசி ஒட்டு  கேட்கப்படுகிறது. இதை சட்டமும் அனுமதித்து உள்ளது. ஆனால் ஜெகன்மோகன் தலைமையிலான அரசாங்கம், அரசியல் லாபங்களுக்காக  தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்கிறது என்றும் அந்த கடிதத்தில் நாயுடு கூறி உள்ளார்.